திட்டமிட்டு இனப்படுகொலையை தொடரந்து மூடி மறைக்கும் இலங்கை அரசாங்கம்
நாட்டில் இனப்படுகொலைதான் நடைபெற்றது என்பதை ஏற்றுகொள்ள எந்த அரசாங்கமும் தயாராக இல்லை என ஈழமக்கள் புரட்சிகர முண்ணனியின் தலைவரும் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இங்கு செம்மணி மாத்திரமல்ல பிரச்சினை, மன்னாரில் புதைக்குழி ஒன்று திறக்கப்பட்டது.
அதிலிருந்து எலும்புகள் எடுக்கப்பட்டது, பின்பு அது குறித்த முறையான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை, இதை போலத்தான் முல்லைத்தீவிலும் நடைபெற்றது.
அதனை விசாரித்த நீதிபதி நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார், அதனுடைய முறையான தகவல் எதுவும் வெளியில் வரவில்லை.
இந்தநிலையில், தற்போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் எந்த அரசாங்கமும் அதனை ஏற்றுகொள்ள தயாராக இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர் பிரதேச அரசியல், புதைக்குழி விவகாரம், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய நேருக்கு நேர் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
