காசா மோதல் : நாடாளுமன்றில் விவாதம்!
காசா மோதல் குறித்த விவாதம் நாளை மறுதினம் (20) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18) நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இந்த முடிவினை அறிவித்திருந்தார்.
நாளுக்கு நாள் உக்கிரமடையும் போரின் விளைவு உலகநாடுகளை வெகுவாக பாதிக்கும் நிலைப்பாடு காணப்படுகிற நிலையில் இது இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காணப்படும் நிலையில் நாளை மறு தினம் இடம்பெறவுள்ள விவாதம் ஒரு திருப்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாதிப்புகளை குறைக்க
இந்த போரின் காரணமாக, இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சபையில் பேசப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துரலிய ரத்ன தேரர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.