இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாளை (01) முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் (Sri lanka Passport) செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனைக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு
எனவே இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வசதியாக நாளை முதல் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |