யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த விழிப்புலனற்ற மாணவன்! குவியும் பாராட்டுக்கள்
வவுனியாவை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ், மொழிப்பெயர்ப்பு கற்கைத் துறையில் சிறப்பு கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த முதல் விழிப்புலனற்ற மாணவன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவன், தோலில் ஏற்பட்ட ஒருவித நோய் காரணமாக 17 வயதில் முற்றாக கண்பார்வையை இழந்துள்ளார்.
சிறப்பு கலைமாணி பட்டம் இவர் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் உள்ள விழிப்புலன் வலுவிழந்தோரது வாழ்வகத்தில் க.பொ.த உயர்தரக் கல்வியை தொடர்ந்துள்ளார்.
38 ஆவது பட்டமளிப்பு விழா
அதனையடுத்து, க.பொ.த உயர்தரப் பரீட்சசையில் 2A மற்றும் 1C சித்திகளை பெற்ற இவர், மொழிப்பெயர்ப்பு கற்கை துறையை சிறப்புக் கல்வியாக தெரிவு செய்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், மொழிப்பெயர்ப்பு பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர், நடக்கவிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு கலைமாணி பட்டத்தினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |