சென்னையில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்: தொடரும் கைதுகள்
சென்னை கோயம்பேட்டில் காரால் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என தமிழ்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய களியாட்ட விடுதியின் மதுபான சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணை
விழுப்புரம் இலங்கை முகாமில் வசித்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சென்னை வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர், மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது காரை வேகமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
எனினும், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாலகுரு, சுமன் சக்திவேல் என்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிர் மேலதிக விசாரணைகளை தமிழ்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |