இந்திய பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள இலங்கை பெண்
இந்திய பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்து, நான் இந்தியன் என்பதை உறுதிப்படுத்த உள்ளேன் என்று இந்தியாவில் பிறந்த இலங்கை பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இந்த வாய்ப்பை நான் கனவு கண்டேன் இப்போது நான் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்,” என்று திருச்சியில் உள்ள கோட்டைப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் கூறியுள்ளார்.
நளினி கிருபாகரன் 1986 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் மையமான மண்டபம் முகாமில் பிறந்தார்.
ஏதிலிகள்
குடியுரிமை இல்லாத நிலையில், அதனைப் பெற்று, கோட்டப்பட்டு முகாமின் முதல் அகதியாக வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கான அவரது பயணம் 2021 இல் தொடங்கியது.
இந்திய கடவுச்சீட்டுக்கான, அவருடைய விண்ணப்பம் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
எனினும் 2022, ஓகஸ்ட் 12 அன்று, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நளினியின் பிறப்பு மண்டபத்தில் என்பதைக் கொண்டு, அவருக்கு இந்திய கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்திய பொதுத் தேர்தல்
குறிப்பாக, 1950 ஜனவரி 26 மற்றும் 1987 ஜூலை 1 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 இன் பிரிவு 3 இன் படி, “பிறப்பால் குடிமகன்” ஆவார் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
இறுதியில், அவர் தனது கடவுச்சீட்டை பெற்றார், ஆனால் தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் மறுவாழ்வு முகாமில் தொடர்ந்து வசிக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்ற நளினி, முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் அதே உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இலங்கைத் தமிழர்கள்
இந்தநிலையில். பல தசாப்தங்களாக மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன்," என்று அவர் கூறினார்.
"இப்போது, இந்தியாவில் பிறந்த எனது இரண்டு குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.
இதேவேளை மாநிலம் முழுவதும் இதேபோன்ற முகாம்களில் 58,457 அகதிகள் வாழ்கின்றனர். எனவே இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க புதிய அரசுக்கு அரசியல் உறுதி வேண்டும் என்று சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் பேராசிரியர் ஆஷிக் போனோஃபர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |