மாலைதீவு கடலில் இலங்கை படகு விபத்து - ஒருவர் மாயம்
Sri Lankans
distress
Maldives Sea
Indika d Silva
By MKkamshan
மாலைதீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகு கவிழ்ந்ததில் 5 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு , ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா (Indika d Silva)தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட 5 மீனவர்களும் காலி கடற்பரப்பிற்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருவளை கடற்பரப்பிலிருந்து கடந்த 4 ஆம் திகதி பயணித்த இப்படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, கடற்படையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதனையடுத்தே குறித்த படகு விபத்துக்குள்ளானமை இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாலைதீவு மற்றும் மும்பை கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி