ரஷ்ய,உக்ரைன் கூலிப்படையிடம் சிக்கிய மற்றுமொரு இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆட்கடத்தல்காரர்களின் வலையில் வீழ்ந்து ரஷ்ய, உக்ரைன் கூலிப்படையிடம் சிக்கி இன்னல்களை அனுபவித்து வரும் இலங்கையர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்(Pramitha Bandara Thennakoon) தெரிவித்துள்ளார்.
இன்று(13)நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்றுமொரு இலங்கையர்
இதேவேளை, ரஷ்ய கூலிப்படையினரால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு இலங்கையர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய, உக்ரைன் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்நாட்டு இராணுவ சேவையின் முன்னாள் உறுப்பினர்கள் மட்டுமன்றி ரஷ்யாவிற்கு பணிபுரியச் சென்ற இலங்கையர்களும் அந்நாட்டின் கூலிப்படையில் இணைந்து கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வலஸ்முல்லை உடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான லக்சித நுவன் சூரியபண்டார என்ற இளைஞன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலைக்காக சென்று பின்னர் கூலிப்படையில் இணைந்து கொண்டுள்ளார்.
மற்றுமொரு இலங்கையர் சுடப்பட்டு வைத்தியசாலையில்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு ரஷ்ய இராணுவப் பணியில் சேர்ந்தார் என்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவலின்படி அவர் இதன்மூலம் ரஷ்ய குடியுரிமையைப் பெற முடியும் என்று ஒரு பதிவு பரவியது.
இதனிடையே ரஷ்ய கூலிப்படையில் பணியாற்றிய போது சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இலங்கையர், தொடர்பில் ஒரு மாதம் கடந்தும் எந்தவொரு தகவலும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |