மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
மியன்மாரில் (Myanmar) தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் (Sri Lanka) கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு (Thailand) அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் (myanmar cyber criminal area ) கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாதக் குழுவால், கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்களை (USD) கப்பமாக கோரியிருந்த நிலையில் சிறிலங்கா தூதரகத்தின் உதவியுடன் கடந்த ஆண்டு அவர்களில் சுமார் 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.
சட்டவிரோத சைபர் அடிமைகள்
எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது சுமார் 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புகள் என்ற பொய்யான தொழில் வாய்ப்புக்காக, சுற்றுலா விசாக்களில் ஏமாற்றி அழைக்கப்பட்டு, மியன்மாரில் ஒரு மோசமான இன ஆயுதக் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட 60 இலங்கையர்களைக் கொண்ட குழுவின் அவலநிலை தொடர்பில் 2023 டிசம்பரில், ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
இந்த நிலையில், தற்போது அடிமைகளாக இருக்கும் 48 இலங்கையர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
மனிதக் கடத்தல்
இது தொடர்பாக தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான Parnpree Bahiddha-Nukara உடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தொலைபேசியில் உரையாடினார்.
மியன்மாரிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிவிவகார அமைச்சு, மனிதக் கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள சுமார் 48 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறிலங்கா தூதரகம் கடந்த ஆண்டு (2023) பயங்கரவாதக் குழுவிடமிருந்து 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |