சிறீதரனின் செயற்பாடு தவறு! தமிழக சந்திப்பை தடுக்க சதி
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கான திட்டத்தை வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் அண்மையில் சந்தித்திருந்தனர்.
சென்னையில் வைத்து இது தொடர்பில் பல தமிழ்நாடு அரசியல் பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்திருந்தனர்.
இந்த குழுவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், க.சுகாஷ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் ந.காண்டீபன் ஆகியோரே இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதை குறித்த குழு அங்கு வலியுறுத்தியது.
இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் பின்னரும் சந்திப்புக்கு முன்னதாகவும் தமக்கு இருந்த அழுத்தங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் ஐ.பி.சி தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலில் பின்வரும் விடயங்களை விளக்கியிருந்தார்....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |