தயாசிறி ஜயசேகர போன்றவர்களே கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த சூழ்ச்சி!
ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சர்களாக பதவிவகித்து தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராக உள்ளவர்களே அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கு அக்கட்சியின் தற்போதைய தலைவரும் ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிிறசேனவே காரணம் எனவும் பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தனக்கு அளித்த அமைச்சுப் பதவியானது, கேலிக்குரியதாகும் என விமர்சனம் வெளியிட்டிருந்தார்.
அந்த அமைச்சுப் பதவியை பஸில் ராஜபக்சவே பெயரிட்டிருந்தார் என பலவித கடுமையான விமர்சனங்களை தயாசிறி ஜயசேகர வெளியிட்ட காரணத்திற்காக ஆளுந்தரப்பிலிருந்து, தயாசிறிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் கோட்டா-மஹிந்த அரசை வீழ்த்த சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்று சிறிய கட்சியாகிவிட்டது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மாத்திரமல்ல, உலகின் பிரதான கட்சி, சிறிய கட்சி என்பதை அடையாளப்படுத்த நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் வகிக்கின்ற தலைவர்களே கட்சியின் வீழ்ச்சிக்கான பொறுப்பாளிகளாகும்.
அது எமது தவறல்ல. ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலில் எம்முடன் பயணித்தவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடல் மற்றும் பதவிகள் அளிக்கப்படுகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு நியாயமான தீர்மானங்களே வழங்கப்பட்டுள்ளன.
களுத்துறை, நுவரெலியா மாவட்டங்களில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டது. பிரதிபலன் ஒன்று தசத்திற்கும் குறைந்துவிட்டது. சுதந்திரக்கட்சிக்கு பொதுஜன முன்னணி நிலையான தீர்வளிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை உணர்ந்துகொள்கின்ற அறிவு அவர்களுக்கு இல்லை.
கடந்த நல்லாட்சியின் காலத்தில் அமைச்சர்களாக பதவிவகித்த சிலர் இன்றைய அரசாங்கத்திலும் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.