இலங்கையில் ஒட்சிசன் சிலின்டர்கள் பற்றாக்குறை? அமைச்சர் வெளியிட்ட தகவல்

Corona Singapore Dullas Alahapperuma SriLanka Oxygen Cylinder
By Chanakyan May 03, 2021 05:20 AM GMT
Report

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை கிடையாது. தற்போதைய தேவைக்கு போதுமான அளவு ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மருத்துவத்துறைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இவ்விரண்டு நிறுவனங்களிடமும் உற்பத்தி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையினை கோரினார்.

இவ்விரு நிறுவனங்களும் மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22 ஆயிரம் லீட்டர் ஒட்சிசன் சிலிண்டர்களை சாதாரண தேவைக்கான உற்பத்தி செய்கின்றன. தற்போது அந்த உற்பத்தி 67 ஆயிரம் லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் லீற்றர் ஒட்சிசன் சிலின்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே மருத்துவ துறையில் ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை தேவையான அளவு மேலதிகமான இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் தொடர்பிலும் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் அவசர சிகிச்சை கட்டில்கள் இல்லாத காரணத்தினால் உயிரிழக்கவில்லை. ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கு மரணங்கள் பெருமளவில் தற்போது பதிவாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இப்பிரச்சினையை நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்.

சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை அனைவரும் முழுமையாக பின்பற்றுவது அத்தியாவசிய கடமையாகவே கருதப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி