வடக்கு தொடருந்து பாதையை மூடுவதற்கு நடவடிக்கை
எதிர்வரும் 06 மாதங்களுக்குள் வடக்கு தொடருந்து பாதையை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு தொடருந்து பாதையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான தொடருந்து பாதையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

புணரமைப்பு பணி
அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தொடருந்துகளை இயக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
களனி மிட்டியாவத்தை தொடருந்து பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.