சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுனவினர் முக்கிய பேச்சு
srilanka
basil rajapaksa
By Vasanth
மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த கட்சியின் சார்பில் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்