குழந்தைகள் 20 பெண்கள் உட்பட 57 பேர் பலி - அகதிகள் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரம்
srilanka
covid19
corona
peoples
tamilnews
By S P Thas
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 57 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து உள்ளது. அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்றனர்.
இந்த பயணத்தில் பல காரணங்களால் அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி