இலங்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர்
SRILANKA
Colombo
LNDIA
By Vasanth
இலங்கைக்கு இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று மாலை 4.30 மணி அளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இரண்டு இராஜதந்திர அதிகாரிகளும் வருகைதந்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி