ஸ்ரீலங்கா அரசாங்கம் இணையம் மூலம் விஷமும் விற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!
online
alcohol
poison
sri Lanka
By Kalaimathy
இணையத்தளம் மூலம் வீட்டில் உள்ள ஆண்களுக்கு மது விற்பனை செய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வீட்டில் உள்ள தாய்மார் மற்றும் பிள்ளைகளுக்கு இணையம் மூலம் விஷம் அனுப்பி வைக்க நேரிடும் என சிங்களே தேசிய அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இணையம் மூலமாக மதுபானம் விற்பனை செய்யும் அரசாங்கத்திற்கு விரைவில் விஷமும் விற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலம் ஒன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டம் முட்டாள்தனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண மக்களுக்கு இணையத்தை பயன்படுத்தி அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி