பசிலுக்காக பதவியை துறந்த நாடாளுமன்ற உறுப்பினர்!
srilanka
basil
parliament
By S P Thas
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எதிர்வரும் எட்டம் திகதி பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டியுள்ள நிலையில், அவருக்கான வெற்றிடத்தை ஏற்படுத்தவே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கெட்டகொட இராஜினாமா செய்திருக்கின்றார்.
இதேவேளை, ஜயந்த கெட்டகொடவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவி அளிக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவினால் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி