பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கச் செல்லும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு

police human rights complaint sri Lanka sexual harassment
By Kalaimathy Jul 03, 2021 11:37 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சமூக அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

சித்திரவதைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 2, வெள்ளிக்கிழமை மக்கள் சக்தி அமைப்பின் சார்பில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தின் சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதுக்கை மற்றும் நெலுவ பொலிஸ் நிலையங்களில் அண்மையில், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களிலிருந்து "இலங்கை சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சமிக்ஞையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும், அவை நிகழாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் சக்தி அமைப்பின் நிர்வாக உறுப்பினர் அஷிலா தண்தெனியவால், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்குள் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமையை மீறுவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் அண்மையில் தனது பெற்றோருடன் பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

"கடந்த 21ஆம் திகதி பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்து ரசீதை பெற்றுக்கொண்ட பின்னர், முறைப்பாட்டை செய்ய சென்ற சிறுமியின் தந்தையை அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாய்  சம்பவ இடத்தில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக, மக்கள் சக்தி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முறைப்பாடு செய்வதற்காக, ஜூன் 29ஆம் திகதி தனது தாயுடன் நெலுவ காவல் நிலையத்திற்குச் சென்ற 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பொலிஸ் அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொலிஸாருக்குள் நடந்த இரண்டு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பொலிஸாரால் குடிமக்களுக்கு இன்னும் பாதுகாப்பை வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புவதாக மக்கள் சக்தி அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

காவலில் இருந்த சந்தேக நபர்களை பொலிஸாரின் உதவியுடன் கொலை செய்வதன் மூலம் ஸ்ரீல்கா பொலிஸார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சட்டவிரோத மற்றும் பயங்கரமான நடத்தைகளைக் காட்டியதாகவும் மக்கள் சக்தி அமைப்பு தனது முறைப்பாட்டில் நினைவுபடுத்தியுள்ளது.

பாதுக்கை மற்றும் நெலுவ பொலிஸ் நிலைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், ஸ்ரீல்கா பொலிஸ் துறையில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடுக்கவும், இலங்கையின் முன்னணி மனித உரிமை அமைப்பான, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென, மக்கள் சக்தி அமைப்பு அந்த கடிதத்தின் ஊடாக கோரியுள்ளது. 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026