காலியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜேர்மன் பெண்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Germany
Death
By pavan
காலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜேர்மனியிலிருந்து வந்த பெண் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் 60 வயதுடையவர் எனவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஜேர்மனிக்கு சென்று பின்னர் தனது வீட்டில் வசிப்பதற்காக நாடு திரும்பியவர் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஹபராதுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (20) பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி