இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் தொழில் பயிற்சி: இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தம்
தென் கொரியாவில் தொழில் பயிற்சி மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (02) கையொப்பமிடப்படவுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் விழாவில் கலந்துகொள்வதற்காக, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தென் கொரியாவிற்குப் புறப்பட்டுள்ளார்.
இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிலாளர் அமைச்சு, இலங்கையின் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), கொரியக் குடியரசின் கியோங்சங்னம்-டோ மாகாணம், சச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கையொப்பமிடப்படும்.
உயர்கல்வி
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தொழிலாளர் அமைச்சின் கீழ் உள்ள தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை மாணவர்கள், தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தங்கள் கல்விக்குப் பிறகு, இந்த மாணவர்கள் கியோங்சங்னம்-டோ மாகாணத்திற்குள் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளையும், அங்கு நீண்டகால வசிப்பிடத்திற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |