சீனா - அமெரிக்கா - இந்தியாவின் பலம்பார்க்கும் களமாக சிறிலங்கா! ஜே.வி.பி குற்றச்சாட்டு (படங்கள்)

America India JVP Chine Anura Kumara Dissanayake
By Chanakyan Nov 14, 2021 11:33 AM GMT
Report

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்தை நிரூபிக்கும் தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளம், 13 ஏக்கர்களை கொண்ட சேவைகள் நிலையம் மற்றும் போர்ட் சிட்டி ஆகிய அதிமுக்கிய இடங்கள் சீனாவின் பிடிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் 32ஆவது காா்த்திகை வீரா்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

இன்று வீசா இல்லாத பயணியைப் போன்ற சீனக் கப்பல், இலங்கையில் இருந்து செல்லாமல், இலங்கையின் கடற்பகுதியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கத்தின் அமைச்சரவை, அமைச்சா்கள் வெளியில் வந்து அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இதனைக் கருத்தில்கொள்ளாமல், அரசாங்கம் குடும்ப அதிகாரத்தைக் கொண்டு செயற்படுகின்றது. எனினும் இன்று இலங்கையில் இருப்பது சனநாயக்க நிர்வாகம் அல்ல. குடும்ப நிர்வாகமாகும்.

எனவே இன்று சிறந்த ஒரு நிர்வாகத்தை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிலர் இந்தப் பிரச்சினைக்கு நாடுகளை மாற்றினால் தீர்வுக்கிடைக்கும் என்று நம்புகின்றனார். எனினும் அது உரிய தீர்வு இல்லை.

இந்த நாடு அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல வேண்டிய நாடு என்ற வகையில், பொதுமக்கள் இயக்கத்தை அமைக்க வேண்டியுள்ளது. இந்த புதிய இயக்கத்தை அமைப்பதற்காக அனைவரும் அழைப்பு விடுக்கின்றேன்.

அதுவே இன்று நாட்டை மீட்கும் ஒரே மார்க்கமாகும் என்று அவர் தொிவித்துள்ளார்.

சீனா - அமெரிக்கா - இந்தியாவின் பலம்பார்க்கும் களமாக சிறிலங்கா! ஜே.வி.பி குற்றச்சாட்டு (படங்கள்) | Srilanka Stronghold China America India


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி