பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
                    
                vaccine
            
                    
                corona
            
                    
                school
            
                    
                student
            
                    
                sri Lanka
            
            
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான காலக்கெடு இதுவரை இறுதி செய்யப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படாது என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
இருப்பினும் பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
எனினும் அதற்குரிய திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        