தமிழக கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையர் கைது!
srilanka
indian
indian sea
fisherman arrested
By Kanna
தமிழக கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர் ஒருவர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதியில் இருந்து 14 கடல் மைல்கல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான படகொன்றினை அவதானித்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை சோதனையிட்டனர்.
இதன்போது, எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் குறித்த இலங்கை மீனவர் கைதானார்.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான மீனவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் காவல்படை அதிகாரிகள், மற்றும் மாநில உளவுத்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி