முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல்
சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியன் திருட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யபட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யபட்ட குறித்த சந்தேக நபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27ஆம் திகதி வரை விளக்கமறியல்
இந்த வழக்கில் தொலைபேசி அழைப்புப் பதிவுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக CID தெரிவித்துள்ளது.

மேலும், மற்றொரு சந்தேகநபரான அஜித் பிரியந்தாவை கைது செய்யவும், மோசடியில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது.
இதன்படி ஏனைய நான்கு சந்தேகநபர்களும் நீதவானின் உத்தவிற்கமைய ஜூலை 27ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 11 மணி நேரம் முன்