குட்டிமணி தங்கதுரை சிலை விவகாரம் - ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை
வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறையில் படுகொலை
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை police ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்க்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |