அடுத்த மூன்று மாதங்களுக்குள் மருந்துக்கான கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி
Cannabis
medicinal
By Mkkamshan
புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து தயாரிப்பிற்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ள“மருந்துக்கான காஞ்சா”வை சிறிலங்கா ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு இதற்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உலகில் பல நாடுகளில் மருந்து உட்பட பல தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் கஞ்சாவை பணப் பயிராக பயிரிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி