பாரிய பாதிப்புக்குள்ளான டொயோட்டா கார் உற்பத்தி
டொயோட்டா கார் தொழிற்சாலையில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ மாகாணத்தின் சொரோகாபா நகரில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா ரக கார் உற்பத்தி ஆலை செயற்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்ளாக புயல் பாதிப்புகளால் கனமழை பெய்து பலத்த காற்றும் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்தி ஆலை
இதனால் உற்பத்தி ஆலையை பெரிதும் சேதமாகி கார் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் போர்ட்டோ பெலிஜ் என்ற ஆலை உள்பட இரண்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தொழிலாளர்கள்
குறித்த புயல் பாதிப்பால் முப்பது தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி யாரிஸ் கிராஸ் என்ற புது வகை கார் மாதிரியை உள்ளூரில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்த திட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய சம்பத் மனம்பேரி : வெளிவரும் பகீர் தகவல்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

