'அமைதி' அல்லது 'துன்பம்' நிறைந்ததாக மாறப்போகும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முக்கிய நபரின் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி 'அமைதி' அல்லது 'துன்பம்' நிறைந்ததாக இருக்கலாம் என்று ஈரானிய அதிகாரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இது தொடர்பில் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்
லாரிஜானி ஆறு வெவ்வேறு மொழிகளில் பதிவிட்ட முழு செய்தியில்,
எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் வெளியான அறிவிப்பு
"ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான ஜலசந்தியாக இருக்கும் அல்லது போர் வெறியர்களுக்கு தோல்வி மற்றும் துன்பத்திற்கான ஜலசந்தியாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

image credit -xalqqazeti.az
ஈரானுடனான போர் மத்திய கிழக்கிலிருந்து ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் விநியோகங்களில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது - இது உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |