அரசை விமர்சிப்பவர்கள் மௌனமடைய கோட்டாபயவிற்கு விசித்திரமான ஆலோசனை வழங்கிய அமைச்சர்
அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களை மௌனமடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விசித்திரமான ஆலோசனையை வழங்கியுள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.
அதன்படி காகம் ஒன்றை கொன்து அதன் இறக்கையை தொங்கவிட்டால் அனைவரும் மெனமாகிவிடுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட ஆலோசனையை வழங்கியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
திஸ்ஸமஹராமா வாவி திட்டம் என்பது அரச திட்டம் யார் அதனை எதிர்ப்பது என கேள்வி எழுப்பியுள்ள அவர் தொல்லியல் திணைக்களமும் அரசாங்கத்தின் ஒரு பகுதியே- அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியவுடன் அனைத்து அமைச்சுகளும் அனைத்து திணைக்களங்களும் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசாங்கத்தின் பல்வேறு ஸ்தாபனங்களே ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதே பிரச்சினையாக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.