இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் அழைப்பின் பேரில் நாட்டு வருகை தந்துள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகள் குழுவுடன் இந்த கலந்துரையாடல் வியாழக்கிழமை (7) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் உப செயலாளர் ஓமலே விளாடிமிரோவிச் தலைமையில் ரஷ்யாவின் தூதுக்குழுவினர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
சர்வதேச தகவல் பாதுகாப்பு
இதன்போது இரு நாட்டு பாதுகாப்புகள் மற்றும் இலங்கைக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்தவும், அதற்கு ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும், மேலும் சர்வதேச தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார்ந்தும் இதன்போது, கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் பதில் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |