மன்னாரில் கடும் காற்றுடன் கடல் சீற்றம்!! மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்தது கடல் நீர்
By Shalini
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் காற்றுடன் மழை பொழிந்து வருகின்றது.
கடும் காற்று காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து வருவதுடன் மீனவர்களின் தற்காலிக வாடிகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்துள்ளது.
தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருவதனால் கடல் சீற்றம் அதிகரிப்பதுடன் கடல் நீர் மக்கள் குடியுருப்பு பகுதிகளுக்குள் புகுவதற்கான நிலமையும் காணப்படுகின்றது.
அதே நேரம் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்ட படகுகளை மீனவர்கள் உயரமான இடங்களுக்கு எடுத்துச் செல்வதுடன் கடற்கரை ஓரங்களில் வைக்கப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்