சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்கள்… "குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது.
சர்வதேச நீதி
இதனால் சர்வதேச நீதியினைக்கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். எமது போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன.
எனவே குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும். அதுவரையில் நாம் போராடிக்கொண்டே இருப்போம்.''என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, 12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |