மாணவனை தாக்கிய ஆசிரியர்..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Colombo
Sri Lanka
Ceylon Teachers Service Union
By pavan
கொழும்பு தேசிய பாடசாலை மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் குறித்த தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் மேலும் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் இந்த அபராதத் தொகையை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா பிறப்பித்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆசிரியர்

இந்நிலையில் அரசாங்க ஊழியர் ஒருவர் தனது நேரத்தை விரயமாக்காது முதல் தடவையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினால் குறைந்தளவு தண்டனை விதிக்குமாறு ஆசிரியரின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி