முல்லைத்தீவில் மாணவனைக் காணவில்லை - பெற்றோர் செய்துள்ள முறைப்பாடு! (காணொலி)
முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 வயதையுடைய பாடசாலை மாணவன் வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக காணாத நிலையில் பெற்றோரினால் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் கே.சானுயன் என்ற மாணவன் 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
28.03.2022 ஆம் திகதி வரையும் இவர் வீடு திரும்பாத நிலையில் இவரின் தொடர்புகள் அற்ற நிலையிலும் இவரினை தேடி கண்டுபிடித்துத் தருமாறு பெற்றோர்களால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 0775690671 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.




