பாடசாலையில் குழப்பம் ஏற்பட்டதா?
கம்பஹா - மினுவாங்கொடை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலிற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது போன்ற கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,