திருகோணாமலையில் கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாப்பாக அழைத்து சென்ற ஹெலிகொப்டர்!
புதிய இணைப்பு
திருகோணாமலை சேருவில பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் வான் வழியாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சீரற்ற கால நிலை காரணமாக மாவிலாறு பகுதியின் அனைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் மற்றும் சேருவில பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் சுகாதார வசதிகளை இன்று (01) ஹெலிகெப்டர் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவும் களத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதி
அத்தோடு, வரும் இயற்கை சீற்றம் காரணமாக திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
திருகோணமலை இரால்குளி பாலம் தொடக்கம் பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அங்கு சிக்குண்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது.0
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தரை வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் (Boat) இயந்திரப் படகு மூலமாக மக்களை ஏற்றி இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
காலநிலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் நீரின் வேகம் ஓரளவு குறைந்துள்ள நிலையிலும் வீடுகளுக்குள் புகுந்த நீர் இன்னும் அவ்வாறே உள்ளதுடன் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.
போக்குவரத்து மார்க்கங்கள் துண்டிப்பு
மகாவலி பெருக்கெடுப்பின் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதனால் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இயந்திரப் படகு மூலமாக வெளியேற்றப்படுகின்றனர்.

பல போக்குவரத்து மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 289 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4,117 நபர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் சுமார் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3,118 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
போக்குவரத்து முற்றாக தடை
இதேவேளை ஆலங்கேணி - பூவரசந்தீவுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதால் படகு மூலமாக மக்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

திருகோணமலை - கொழும்பு வீதியில் குட்டிக்கராச்சி பாலத்தில் நீர் மட்டம் குறைந்த போதிலும் அதனுடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மகாவலி கங்கையின் பெருக்கெடுப்பின் காரணமாக பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, அடப்பனார் வயல், ஆலங்கேணி, ஈச்சந்தீவு, பூவரசந்தீவு, சம்மாவச்சதீவு, நெடுந்தீவு, கச்சக்கொடித்தீவு, உப்பாறு, சோலை வெட்டுவான் முதலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22232 குடும்பங்களை சேர்ந்த 72254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மதியம் 12 00pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17004 குடும்பங்களை சேர்ந்த 56479 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
61பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 5228 குடும்பங்களை சேர்ந்த 15775 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 1844 நபர்கள் தம்பலகாமம் 1373 நபர்கள். மொறவெவ 403 நபர்கள். சேருவில 2287 நபர்கள். வெருகல் 5210 நபர்கள் மூதூர் 22378 நபர்கள். கிண்ணியா 16339 நபர்கள், கோமரங்கடவல 942 நபர்கள். பதவிஸ்ரீபுர 1242 நபர்கள். குச்சவெளி 19255 நபர்கள். கந்தளாய் 981 நபர்கள். பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




