அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள்

Dinesh Gunawardena Douglas Devananda Ranil Wickremesinghe
By Sumithiran Nov 11, 2023 05:16 AM GMT
Report

தென்பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை வடக்கில் நியமிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தனிவிடம் நேரடியாகவே தனது ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அவரது கோரிக்கையை மேற்படி இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுக்கும்

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிககளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு - கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள் | Success For Minister Douglas

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டவர்கள் இருக்கின்ற நிலையில், பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், குறித்த விவகாரம் ஓரவஞ்சனையான தீர்மானங்களாக பாதிக்கப்படுகின்றவர்களினால் பார்க்கப்படும் என்பதுடன் தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் சுட்டிக் காட்டினார்.

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் : இராணுவத்தினரால் வைக்கப்பட்ட பதாகை (படங்கள்)

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் : இராணுவத்தினரால் வைக்கப்பட்ட பதாகை (படங்கள்)

ரணில் வழங்கிய உத்தரவு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அதிபர், எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மூலமே வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள் | Success For Minister Douglas

அண்மையில் யாழ். பல்கலைக் கழகத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஏழு சிற்றூழியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

தீபாவளி தினத்தில் நந்திக்கொடி

அதேவேளை இந்த கலந்துரையாடலில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிபர் செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் போன்றவற்றில் நந்திக் கொடி பறக்கவிட்டு தீபங்களினால் அலங்கரிப்பதற்கும், தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்திற்கு ஆறுதல் திட்டம் என்ற மொழிபெயர்ப்பினை தமிழ்மொழியில் பயன்படுத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள் | Success For Minister Douglas

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025