மரக்கறி தட்டுப்பாடு எதிரொலி -அதிகரிக்கும் மற்றுமொரு விலை
price
increase
food-packaging
By Sumithiran
நாட்டில் நிலவும் மரக்கறித் தட்டுப்பாடு மற்றும் மரக்கறி விலை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு நாளை (நவ.23) முதல் உணவு பொதி மற்றும் பிளேன்டீ ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவற்றுக்கு முகங்கொடுத்து உணவுப்பொதியின் விலையை அதிகரிக்காவிட்டால் உணவக உரிமையாளர்கள் திவாலாகிவிடுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்