யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை
யாழில் திடீர் பணக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமாக சொத்து குவித்தவர்கள் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்
அந்தவகையில், திடீர் பணக்காரர்கள் மற்றும் சொத்து குவித்தவர்கள் தொடர்பில் சுமார் 18 பேர் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதாவது குறுகிய காலத்தில் அதிக சொத்துக்களை போதைப் கடத்தல்கள், மீட்டர் வட்டி, கப்பம் போன்றவற்றின் மூலம் திடீர் பணக்காரர்கள் ஆகிய சுமார் 18 பேர் காவல்துறை விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டனர்.
நீதிமன்றம் முலம் பறிமுதல்
இவர்களில் சிலரை நீதிமன்றம் மூலம் அவர்களின் சொத்து விபரங்களை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது சொத்து விபரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத அவர்களின் சொத்துக்கள் விரைவில் நீதிமன்றம் முலம் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டது
இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |