கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியலில்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Court of Appeal of Sri Lanka
High Court of Sri Lanka
By Thulsi
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சுகீஷ்வர பண்டார, ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (23) கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றச்சாட்டு
2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய போதும், ஜனாதிபதிக்கான செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சுகீஷ்வர பண்டார மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |