தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் : அம்பலப்படுத்தும் சுமந்திரன்
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக கோரப்பட்டமை ஒரு தொழிநுட்ப ரீதியான தீர்மானம் மட்டுமே என்ற அடிப்படையில் மற்றைய கட்சிகள் இணங்கினால் மட்டுமே அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருந்தோம் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ( M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சின் யாழ்ப்பாண (Jaffna) தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று (11) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில்இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் கூட்டணியிலே பங்காளிகளாக செயற்பட்டவர்கள் எங்கள் கருத்தை ஏற்றுகொள்ளவில்லை, அதனை நிவர்த்தி செய்ய கட்சியின் தலைவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இருப்பினும், அவர்கள் தாங்களாக ஒரு தீர்மானத்தை எடுத்து, அவர்களாக ஒரு கூட்டணியாக செயற்படுவதாக முடிவெடுத்துள்ள நிலையில், நாங்கள் தனித்து போட்டியிடும் ஒரு சூழ்நிலை இருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அடிப்படையில் தனித்து போட்டியிடவும் தயார் மற்றும் கட்சிகளுடன் இணைந்து போட்டியடவும் தயார் ஆனால் பிரதான கட்சியாக நாங்களே செயற்படுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்