ஆரம்பமான கோடைகாலம் : கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் எவை தெரியுமா?
கோடை காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுட்டெரிக்கும் வெயில் பல உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இதில் இருந்து தப்பி, உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்க பழங்களே ஒரே தீர்வு. கோடை காலத்தில் நம்மால் தவிர்க்க முடியாத ஒரு பழம் மாம்பழம்.
மா, பலா, வாழை இதில் எப்பொழுதுமே மாம்பழம் முன்னிலை வகிக்கும். இதில் அல்போன்ஸா, இமாம்பசந்த், மல்கோவா என்று பல வகையுண்டு.
அந்த வகையில் கோடை காலத்தில் உண்ண வேண்டிய பழங்கள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்
தர்பூசணி
இதற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம் இது.
94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம்.
இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.
கிர்ணிப்பழம்
கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது.
இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட், பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது.
இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தை பொலிவடைய செய்யும்.
அன்னாசி பழம்
வைட்டமின் சி அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ளது, இது செல் சேதத்தை எதிர்த்து போராட மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகம். நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட அன்னாசியை கோடை காலத்தில் சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சேதமடைந்த மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது
பப்பாளி
வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது.
தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் விட்டமின்களின் சிறந்த ஆதாரமாக இது இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 20 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்