உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம்! சபையில் அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்றின் தீர்மானம்
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குழு நிலை திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென நீதிமன்றம் அறிவித்ததாக பிரதி சபநாயகர் அஜித் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
எனினும், இந்த சட்டமூலம் தொடர்பான குழு நிலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சட்ட புத்தகத்தில் இந்த சட்டமூலம் இதுவரை உள்ளடக்கப்படாத காரணத்தால் அதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை முன்னெடுக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.