பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் : ரணிலின் உத்தரவு
பொருளாதார பிரச்சினைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், ஜூன் முதல் வாரத்திலிருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த காப்புறுதியின் மூலம் பயனடைவார்கள் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாணவர் காப்புறுதி
அத்தோடு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் (Susil Premajayantha ) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், அண்மையில் குறித்த சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |