சிகிச்சை நிறைவுற்ற சுரேஷ் சலே மீண்டும் சி.ஐ.டியின் பொறுப்பில்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சிகிச்சைகளை நிறைவு செய்து வைத்தியசாலையை விட்டு வெளியேற முடியும் என நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெனெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வைத்தியர்கள் குழாமால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சுரேஷ் சலே இன்று (06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மருத்துவ அறிக்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சுரேஷ் சலே சந்தேக நபர் எனப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெப்ரவரி 25ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகள் முற்றாக முடங்கியிருந்தன.
பல் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை தேவை எனும் சர்ச்சைக்குரிய மருத்துவ அறிக்கைகளை அவர் வெளியிட்டிருந்ததால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படாமல் இருந்ததாக சட்டமா அதிபர் திணைகள அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்த 10 நிபுணத்துவ வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழு, அவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
வைத்திய அறிக்கையை அடுத்து, அவரை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் தடுப்புக் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |