ஜனாதிபதியின் கொள்கைக்கு ஏற்ப அரசு செயல்படும்! இறுதி முடிவு விரைவில் - சுசில் பிரேமஜயந்த தகவல்
srilanka
susil premajayantha
gotabhaya rajapaksa colombo
By Vasanth
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டதற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான முடிவை எட்டுவதற்கு முன்னர் அனைத்து விடயமும் கருத்திற்கொள்ளப்படும்.
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டதற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும். கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இறுதி முடிவை எட்டுவதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை கூடி ஆராயும் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி