யாழில் தாய் மற்றும் சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சந்தேக நபர் கைது

Sri Lanka Police Jaffna Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Dec 09, 2024 08:52 AM GMT
Report

யாழ் (Jaffna) - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (9.12.2024) வட்டுக்கோட்டை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை (Vaddukoddai) காவல்துறை நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் பிறப்புச் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

யாழில் பிறப்புச் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

சிறுவன் மீதும் தாக்குதல் 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கணவனை பிரிந்த குறித்த தாயும் மகனும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

யாழில் தாய் மற்றும் சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சந்தேக நபர் கைது | Suspect Arrested Assaulting Mother Boy In Jaffna

இதன்போது பளை பகுதியை சேர்ந்த சந்தேகநபர் அராலி பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தபோது, அவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குறித்த பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அங்கு தங்கியிருந்த சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி குறித்த பெண் மீதும், குறித்த பெண்ணின் மகனான சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் தனது தாக்குதல் மூலமே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாருக்கு கூறியுள்ளார்.

அதன்பின்னர் அந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவேளை சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தி, சிறுவனை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

யாழ்ப்பாண ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது!

யாழ்ப்பாண ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது!

ஆரம்பகட்ட விசாரணை

இந்நிலையில் குறித்த சிறுவன் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த வேளை, அந்த சிறுவனை மல்லாகம் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்தினர்.

யாழில் தாய் மற்றும் சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சந்தேக நபர் கைது | Suspect Arrested Assaulting Mother Boy In Jaffna

இதன்போது, அந்த சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும், சந்தேகநபரை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தவகையில் பளை பகுதியில் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் மீண்டும் இன்றையதினம் அராலி பகுதிக்கு வந்திருந்தவேளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் - பு.கஜிந்தன்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016