பெருந்தொகை மதிப்பிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
கம்பஹா மாவட்டத்தில் எண்டரமுல்ல பகுதியில் உள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கும் ஒரு மையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபரொருவரை எண்டரமுல்ல காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (26.03.2026) நடத்தப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சிறப்பு அதிரடிப் படை களமிறக்கப்பட்டனர்
தற்போது டுபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உத்தரவுகளின் பேரில் இந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கும் மையங்கள் இயக்கப்பட்டு வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனி இரண்டாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாத் சுபாசிங்கவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப் படை களமிறக்கப்பட்டு, நீண்ட கால விசாரணைக்குப் பிறகு போதைப்பொருள் இருப்பும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எண்டரமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவர்.
துபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஒருவருக்கு இந்த போதைப்பொருட்கள் சொந்தமானது என்பது சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |