எதிர்க்கட்சி மீது அமைச்சருக்கு ஏற்பட்ட சந்தேகம்!
மக்கள் வரிசையில் நிற்பதை காண எதிர்க்கட்சியினருக்கு அளவு கடந்த ஆசை என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
அப்போது கூட அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடக்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களை வரிசைகளில் நிற்க வைப்பதா அல்லது பொருள்களின் விலைகளை ஓரளவுக்கு அதிகரித்தேனும் மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்குவதா?? இந்த இரண்டில் எது சிறந்தது.
மக்களை வரிசையில் நிற்க வைப்பதா, அல்லது பொருட்களை இறக்குமதி செய்து, சாதாரண விலை அல்லது மக்களுக்கு சமாளிக்க முடிந்த விலையில் அதாவது சற்று விலையை அதிகரித்து வழங்குவதா? இதில் எது சிறந்தது.
மக்கள் வரிசையில் நின்றால் என்ன நடக்கும். அரசாங்கத்தை நன்றாக விமர்சிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.